மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 87 ரூபாவிலிருந்து 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 253 ரூபாவால் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலையை அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

