நாட்டின் இருவேறு பகுதிகளில் இன்றைய தினம் அடுக்குமாடி கட்டிடம் மற்றும் பாறையில் இருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாவனெல்ல உதுவன்கந்த பாறையிலிருந்து வீழ்ந்து பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் 58 பேர் பேரை கொண்ட குழுவுடன் ஆய்வொன்றுக்காக உதுவன்கந்த பகுதிக்கு சென்றிருந்த குறித்த மாணவி இன்று பிற்பகல் பாறையிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்
அல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்கள். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
இதே வேளை , கொள்ளுப்பிட்டிய 19 ஆவது ஒழுங்கை வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்
16 வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த அவர் அவசர தேவைக்காக தரை தளத்திற்கு செல்ல முயன்ற போதே இவ்வாறு தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

