சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் புகழ் போற்றுவோம்- முதல்வர் ஸ்டாலின்

191 0

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்! 2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர் ஆட்சி! ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.