திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்த புத்தகம் இன்று வெளியீடு

240 0

திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்த புத்தகம் இன்று வெளியிடப்பட உள்ளது.2000 ஆண்டுகள் பழைமையான திருமலை திருப்பதி கோயில் பற்றிய கடந்த மற்றும் தற்போதைய அத்தியாயங்களை உடைய  புத்தகங்கள் இன்று வெளியிடப்பட உள்ளது.

“திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றுப் பின்னணி மற்றும் பொதுப்பணிகள்” என்ற தலைப்பில் வெளியாக உள்ள இந்த  புத்தகத்தை திருப்பதி தேவஸ்தானத்தின் பிஆர்ஓ தலாரி ரவி எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழாவை முன்னிட்டு  இன்று இரவு திருமலையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த புத்தகத்தை திருமலை திருப்பதியின் தலைவர் சடலவாடா கிருஷ்ணமூர்த்தி மற்றும் செயல் அதிகாரி டி சாம்பசிவ ராவ்  வெளியிடுகின்றனர்.

இந்த புத்தகம்  தெலுங்கு பதிப்பில் மட்டும் வெளியாக உள்ளது. இதில் திருமலை திருப்பதி கோவில் பற்றிய முக்கிய தகவல்கள்  மற்றும் அப்பகுதியை ஆட்சிபுரிந்த விஜயநகர பேரரசர்கள், பிரிட்டீஷ் ஆட்சிக்காரர்கள் குறித்த தகவல் இடம்பெற்றிருக்கும் என்றும்  இந்த புத்தகம் கடவுளுக்கு சமர்ப்பிக்கப்படுவதாகவும் திருமலை தேவஸ்தான பிஆர்ஓ ரவி தெரிவித்துள்ளார்.