பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள மின்சார முச்சக்கர வண்டிகளை பொருத்தும் தொழிற்சாலைக்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (13) விஜயம் செய்தார்.
மின்சார முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் வகையில் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அண்மையில் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

