மாடறுக்கும் மடுவத்தில் இருந்து திருடப்பட்ட மாடு மீட்பு

209 0

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு பகுதியில் மாட்டுப்பட்டியில் இருந்து திருட்டுப்போன மாடுகளில் ஒன்றை ஏறாவூரில் இறைச்சிக்காக மாடு வெட்டும் மடுவத்தில் இருந்து உயிருடன் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  மீட்கப்பட்டதுடன் இறைச்சிக்கடை முதலாளி ஒருவரை கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் மாட்டுப்பட்டியில் இருந் கடந்த 2 தினங்களுக்கு முன்னர்  4 மாடுகள் காணாமல் போயுள்ளதையடுத்து மாட்டின் உரிமையாளர் தேடிவந்துள்ளார்.

இந்த நிலையில் ஏறாவூர் பகுதியிலுள்ள மாடு வெட்டும் மடுவத்தில் காணாமல்போன மாடுகளில்  ஒன்று  அங்கு கட்டியிருப்பதை  சம்பவதினமான வெள்ளிக்கிழமை மாட்டின் உரிமையாளர் கண்டுள்ளார்.

இதனையடுத்து அந்த மாட்டை இறைச்சி க்கு வெட்டுவதற்கு கொண்டுவந்த மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளரை கண்டுபிடித்து பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து மாடு அறுக்கும் மடுவத்தில் கட்டியிருந்த மாட்டை அடையாளம் காட்டியதையடுத்து அதனை மீட்டதுடன் அந்த மாட்டை ஒருவரிடம் வாங்கியதாக தெரிவித்த மாட்டு இறைச்சி கடை உரிமையாளரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்தவரை 13 ஆம் திகதி சனிக்கிழமை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில்  ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.