சீனா, பாகிஸ்தான் போர்க்கப்பல்களுக்கு அனுமதித்தமை இராஜதந்திரத்துக்கு தோல்வி

207 0

இந்தியாவை பகைத்துக்கொண்டு சீனா மற்றும் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கொடுத்தது இலங்கை இராஜதந்திரத்துக்கு கிடைத்த முதலாவது தோல்வி எனவே இந்தியா விவகாரத்தில் இலங்கை ஒரு அனிசோரா கொள்கைகளை சரியாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் இந்தியாவில் இருந்து மேலதிகமான உதவிகளை பெறுவதற்கு வாய்ப்புக்கள் உருவாகும். என கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும் ஈபி.ஆர்.எல்.எப் பத்மநாப மன்ற தலைவருமான இரா ,துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பஸார் வீதியிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகமாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

இன்றுள்ள சூழ்நிலையில் இந்த அரசு புதிய ஜனாதிபதி தெரிவு செய்கின்றதாக சொல்லப்படுகின்றது ஆனால் இந்த ஜனாதிபதியை பொறுத்தளவில் கடந்த காலத்தில் அம்பாந்தோட்டை விவகாரத்தில் கவலைக்குரிய விடையம் அப்போது எதிர்கட்சி தலைவராக இரா.சம்மந்தன் இருக்கும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா  கையொழுத்துட்டது என்பதை இன்றைய சமுகம் மறந்துவிடக்கூடாது

அம்பலப்படுத்தப்பட்டு வெளியில் கொண்டுவர வேண்டிய விடையங்கள் முடக்கிவிடப்பட்டிருந்தது இந்த விவகாரத்தில் இலங்கை அரசு இனிமேல் ஆவது இராஜதந்திர செயற்பாடு இந்தியாவை பகைக்காமல் ஒரு நாடு ஒருநாட்டின் அரசை செயற்பட வைப்பதற்கு அணிசேரா செயற்பாடுகளும் அணிசேரக்கூடிய செயற்பாடுகளும் ஒரு தத்துவாத்த ரீதியான கொள்கையளவில் இருக்கப்படவேண்டும்.

இலங்கை அரசை பொறுத்தளவில் நீண்ட காலமாக உன்னிப்பாக இராஜதந்திர செயற்பாடுகள் செயற்பட்டுவந்தன ஆனால் குறிப்பிட்ட காலம் போகப் போகு எடுப்பார் கைப்பிள்ளை போலு தனிநபர் செயற்பாடுகளுக்காக இராஜதந்திர செயற்பாடுகள் முடக்கிவிடப்பட்டிருந்தன இந்த வகையில் கடந்த கால செயற்பாடுகள் இலங்கை அரசை கண்டிக்க கூடயதாக இருந்தன இந்தியா விவகாரத்தில் இலங்கை ஒரு அனிசோரா கொள்கைகளை சரியாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் இந்தியாவில் இருந்து மேலதிகமான உதவிகளை பெறுவதற்கு வாய்ப்புக்கள் உருவாகும்.

நாடு எதிர் நோக்குகின்ற அரசியல் ரீதியான விடையங்களில் இலங்கை அரசாங்கம் செயற்பட முடியாமல் அரசியல் தலைமைகள் செயற்படாமல் பின்வாங்குகின்ற நிலமையில் மக்கள் திரண்டு எழுந்து போராடுகின்ற போது பிரதமர் இருந்து ஜனாதிபதி உட்பட அனைவரையும் மாற்றக் கூடியவாறு வெகுஜன போராட்டம் வெற்றி அளித்து தற்போது அரசு ஓரளவிற்கு செயற்பட தொடங்கியுள்ளது

இதனை முன்னேற்றகரமாக கொண்டு செல்வதற்கு அரசு சர்வகட்சி அரசாங்கத்தை செயற்படுவதற்கான செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் சர்வகட்சி ஆட்சிமுறை என சொல்லிக் கொண்டு குறிப்பிட்ட சில கட்சிகளுக்குள் தங்களது செயற்பாடுகளை முடக்கிவிட்டிருப்பது என்பது ஏற்புடையதல்ல

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன் ஆகிய இருவருக்கும் இடையில் கருத்து மோதல் என்பது அந்த தலைமையின் பலவீனத்தை காட்டுகின்றது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இரண்டு பிரதிநிதிகளுக்குள் எழப்படுகின்ற கருத்துக்களை தீர்க்க கூடியவாறு தலைமைகள் ஒரு களத்தை அமைத்து கொடுக்கவேண்டும்

அதைவிடுத்துவிட்டு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரி பிழை என்ற கருத்துக்களை பொதுமக்கள் முன் விவாதிப்பது என்பது அந்த கட்சியின் பலவீனத்தை கொண்டுவரும் என்ற அடிப்படையில் உடனடியாக தமிழரசு கட்சியும் ததமிழ் ஈழவிடுதலை இயக்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையில் ஏற்படுகின்ற கருத்து முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஒரு களத்தை சரியாக அமைத்து உள்ளுக்குள் எழுகின்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.