நீர் கட்டணம், கழிவுநீர் கட்டணங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

118 0

தற்போது பெறப்பட்டுள்ள நீர் கட்டணம் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்த வகையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தொடர்ச்சியான கண்காணிப்புச் செலவு மற்றும் மூலதனக் கடன் சேவைப் பொறுப்பு ஆகியவை உள்ளடக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் கட்டணங்களை மீள்திருத்தம் செய்வதுடன், பொதுமக்களுக்கான நீர் சேவைகளை தொடர்ச்சியாக மற்றும் எவ்வித இடையூறும் இன்றி வழங்குவது அவசியமானது என அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

இதன்படி, நீர்க் கட்டணம் மற்றும் கழிவுநீர்க் கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கு நீர் வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.