ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ அமைப்பாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

34 0

பிலியந்தல பொலிஸ் பிரிவில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற 6 வன்முறை சம்பவங்களில் பிரதானமாக செயற்பட்டமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ தொகுதியின் அமைப்பாளர் கயான் டி மெல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தல பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் இன்று 08 ஆம் திகதி திங்கட்கிழமை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தலா ஒரு இலட்சம் என்ற 6 சரீர பிணையில் குறித்த சந்தேகநபரை விடுதலை செய்யுமாறு , கெஸ்பேவ நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.