வடமதுரை அருகே பயிற்சி காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

32 0

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கரிவாடன் செட்டியபட்டி மலைப்பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தும் பயிற்சி தளம் உள்ளது. இந்த பயிற்சி தளத்தில் ஆண்டுக்கு ஒரு முறை காவலர்கள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபட இன்று வந்திருந்தனர். அவர்களிடம் விசாரித்த ேபாது பல ரகங்களைக் கொண்ட துப்பாக்கிகள் மூலம் தினசரி 50 பயிற்சி காவலர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. நாளை விடுமுறை என்பதால் 10, 11-ந் தேதிகளிலும் பயிற்சி நடைபெறுகிறது என்றனர். துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மக்கள் நடமாட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு யாரும் அழைத்து வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.