கப்பல் விவகாரம் – இலங்கையின் வேண்டுகோள் குறித்து சீன அரசாங்கத்துடன் ஆராய்ந்த பின்னர் பதில்- சீன தூதரகம்

86 0

சீனா கப்பலின் இலங்கை விஜயத்தை பிற்போடவேண்டும் என இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளிற்கு சீன அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் பதிலளிப்பதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன தூதுவருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது- சீன தூதுவரின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு இ;டம்பெற்றுள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வேவுகப்பல்  தனது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றது என்ற அடிப்படையில் இந்தியா முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து சீன கப்பலின் இலங்கை விஜயம் இலங்கை அரசாங்கத்திற்கு பூகோள அரசியல் தலைவலியாக மாறியுள்ளது.

குறிப்பிட்ட கப்பலிற்கான அனுமதியை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் துறைமுக அதிகார சபையும் வழங்கியிருந்தன.

எனினும் அந்த தருணத்தில் தன்னிடம் இது குறித்து தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள இந்தியா இது குறித்து விளக்கம் கோரியுள்ளது.

சீன கப்பல் தற்போது இந்தோனேசியாவின் நடுக்கடலில் காணப்டுகின்றது .