கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்

14 0
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் பாதுகாப்பு கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்றிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளி கூட்டில் இருந்த ஒருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

பின்னர் பொலிஸ் பாதுகாப்பையும் மீறி துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இந்நிலையில் , துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது பாதுகாப்பு கடமையில் இருந்து பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.