வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டுமென வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம் |

14 0

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்  எனும் 100 நாட்கள் செயல்முனைவின் ஐந்தாம் நாள் போராட்டம் இன்று 05 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது வீதி நாடகம் இடம்பெற்றதுடன், மகஜர் ஒன்று வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா உள்ளிட்ட குழுவினரினால் மட்டக்களப்பு மனித உரிமைகள் பிராந்திய பணிமனையின் பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீனிடம் வழங்கியிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த தழிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், செயற்பாட்டாளர் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.