காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

205 0

மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் பதிவு வருமாறு:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் 2020-2021-ல் 12,555 மில்லியன் யூனிட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தியை, 565 மில்லியன் யூனிட்டுகள் அதிகரித்து 2021-2022-ல் 13,120 மில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி செய்து சாதித்தது மின் வாரியம். 2020-2021-ல் 1,06,943 மில்லியன் யூனிட்களாக இருந்த மாநில மொத்த மின் நுகர்வு 2021-22-ல் 9.65 சதவீதம் அதிகரித்த போதும், 1,17,261 மில்லியன் யூனிட்களை வினியோகித்து வரலாறு படைத்தது தமிழ்நாடு மின்சார வாரியம் 2020-21-ல் 61,155 மில்லியன் யூனிட்டாக இருந்த சூரிய ஒளி மின் உற்பத்தியை 1088 மில்லியன் யூனிட்டுகள் அதிகரித்து, 2021-2022-ல் 7,203 மில்லியன் யூனிட்களாக உயர்த்தி சாதனை படைத்துள்ளது மின் வாரியம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.