தாய்வான் மீது வர்த்தக தடைகளை விதித்தது சீனா

135 0

அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் சுற்றுப்பயணம் எதிரொலியாக தாய்வான் மீது சீனா வர்த்தக தடைகளை விதித்து உள்ளது.

சீனாவில் இருந்து தாய்வான் பிரிந்த பின்பு, சொந்த அரசியலமைப்பு, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆகியவற்றுடன் தன்னை ஒரு சுதந்திர நாடாக தைவான் நாடு பார்க்கிறது. ஆனால் சீனாவோ, தாய்வானை தனது கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பகுதி என்று சொல்லிக்கொண்டிருக்கிறது.

தேவைப்பட்டால், தாய்வானை ;சீனாவுடன் இணைப்பதற்கு படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால், தாய்வானுக்கும், அதன் நிலைப்பாட்டுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (வயது 82), தனது ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தில் தாய்வானை சேர்த்துக்கொண்டார். அவர் தாய்வானுக்கு பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளிவந்தன. உடனே சீனா எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியது. நான்சி பெலோசி தாய்வானுக்கு சென்றால், அமெரிக்கா அதற்கான விலையை கொடுக்கும் என்று சீனா எச்சரித்தது.