உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு சீனா உதவக்கூடாது: ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

16 0

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 5 மாதங்களுக்கும் மேலாக படையெடுப்பை நடத்தி வருகிறது. இந்த போரில் அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகள் ரஷியாவுக்கு எதிராக நிற்கின்றன. போரை கடுமையாக எதிர்க்கும் அந்த நாடுகள் ரஷியா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதே சமயம் சீனா, போர் தொடங்கிய நாள் முதல் ரஷியாவுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது.

மாறாக ரஷியா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு சீனா, உதவக்கூடாது என உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 21 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மத்தியில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றியபோது ஜெலன்ஸ்கி இதை தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், “இப்போதைக்கு, சீனா உண்மையில் நடுநிலையாக உள்ளது, நான் நேர்மையாகச் சொல்வேன், சீனா ரஷியாவுடன் இணைவதை விட இந்த நடுநிலை சிறந்தது, ரஷியாவுக்கு சீனா உதவாது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியம்” என கூறினார்.