கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிப்பு

106 0

நுவரெலியா  மாவட்டத்தின் பல நகரங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. தோலுரித்த புரொய்லர் ரக கோழி இறைச்சி ஒரு கிலோ 1400 ரூபாவிலிருந்து 1500 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகின்றது.

சிவப்பு முட்டை 50 ரூபாவுக்கும் வெள்ளை முட்டை 49 ரூபாவுக்கும் விற்கப்பட்டு வருகின்றன.

கோழி தீனியின் விலைகள் அதிகரித்த காரணத்தினாலும் மேலும் எரிபொருட்கள் விலை அதிகரிப்பால் போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ளமை காரணமாக விலைகள் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சிறிய அளவு கோழி பண்ணைகளை நடத்தி வந்த பலரும் இம்மாவட்டத்தில் தமது தொழிலை நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

தற்போது உள்ள போக்குவரத்து செலவுகள் மற்றும் கோழி தீவனத்தின் விலை அதிகரிப்பால் ஒரு கிலோ கோழியை தாம் 1800 ரூபாவுக்கு விற்றாலே நட்டத்திலிருந்து மீளலாம் என்று தெரிவிக்கின்றனர்.

இந்த விலைக்கு நுகர்வோருக்கு கோழி இறைச்சியை விற்க முடியாத காரணங்களில் தாம் இத்தொழிலை நிறுத்தி வைத்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.