பயணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள் – பொது மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

204 0

எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் , பொது போக்குவரத்தில் பயணப்பை கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் , அரச பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் என்பவற்றை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்போது மக்களின் பயணப்பைகள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையிடப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.

எனவே பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.