நாடளாவிய ரீதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் QR முறையை ஏற்றுக்கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (30) வரை 1,060 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோக வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 1,190 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களில் 902 நிலையங்களிலும் மற்றும் 210 IOC எரிவாயு நிலையங்களில் 158 நிலையங்களிலும் QR முறை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 746 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டின் பிரகாரம் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக இதுவரை 47,096,028 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் இன்றுடன் நிறைவடைவதாகவும், நாளை (01) முதல் QR முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த முறைமைக்கு புறம்பாக எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

