கொழும்பு கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதியில் நேற்றிரவு 51 வயதுடைய நபர் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, கொலையாளிகள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கரையோர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

