பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

202 0

பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் மாத விடுமுறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நவம்பர் இறுதி வரை விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்தி விடுபட்ட படிப்பை ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாமதமான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நவம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற பின்னர், உயர்தரப் பரீட்சை நவம்பர் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.