மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் காரணமாக சேவைகளைப் பெறுவதற்கு சேவை நிலையங்களுக்குச் செல்வதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் போது 2022 ஆகஸ்ட் 29 ஆம் திகதி வரை அபராதம் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

