விரைவில் ராஜபக்ஷர்கள் அதிகாரத்திற்கு வருவார்கள் – சாகர காரியவசம்

312 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்கட்சியினர் அவதானம் செலுத்தியதை காட்டிலும் எம்மவர்களே அரசியல் சூழ்ச்சி செய்துள்ளனர்.

ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள். தேசிய பொருளாதாரத்தை நிச்சயம் மேம்படுத்துவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

உலகலாளிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்திய கொவிட் பெருந்தொற்று கடந்த இரண்டு வருடகாலமாக இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் பொருளாதாரத்தை பாதுகாப்பதா அல்லது நாட்டு மக்களை பாதுகாப்பதா என்ற இக்கட்டான நிலை தோற்றம் பெற்றது.

கொவிட் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்,பொருளாதார பாதிப்பை ஒருமித்த வகையில் எதிர்கொள்வோம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அமைச்சரவையில் குறிப்பிட்டு.மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை வழங்கினார்.

கோவி கொவிட் தாக்கத்தலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் திட்டம் வெற்றிப் பெற்றது இருப்பினும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒருசில உறுப்பினர்கள் பொருளாதார நெருக்கடியை அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன் தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சியினர் அவதானம் செலுத்தயதை காட்டிலும் எம்மவர்களே அருகில் இருந்துக்கொண்டு அரசியல் சூழ்ச்சியினால் அரசாங்கத்தை பலவீனப்படுத்தினார்கள் என்பதை நாட்டு மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள்.

ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை வெகுவிரைவில் கைப்பற்றுவார்கள்.தேசிய பொருளாதாரத்தை நிச்சயம் மேம்படுத்துவோம். சுபீட்சமானஎதிர்கால கொள்கை தி;ட்டத்தை நிறைவேற்றுவதே எமது பிரதான இலக்கு என்றார்.