அம்பலாங்கொடை கலகொட வெலபாறை பகுதியில் இன்று இரவு (27) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொட கலகொட பகுதியைச் சேர்ந்த விஜித் டி சொய்சா என்ற 49 வயதுடைய நபரும், அதே பகுதியைச் சேர்ந்த அஜித் சுதர்ஷன என்ற 45 வயதுடைய நபருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அம்பலாங்கொடை உரவத்த பகுதியில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முப்பத்தைந்து வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

