அவசரகாலச் சட்டம் தொடர்பான பிரகடனம் இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது .
பிரகடனத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் கிடைத்தன.
அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிராகவும் வாக்களித்தனர்.
“பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை குறித்த பிரகடனம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

