உள்நாட்டு நிர்ப்பந்தங்களையும் கருத்தில் கொண்டு, இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அமைச்சின் ஆணையை செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் .
வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் , அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உள்நாட்டு நிர்ப்பந்தங்களையும் கருத்தில் கொண்டு, இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அமைச்சின் ஆணையை செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு இதுவரை வழங்கப்பட்ட தலைமைத்துவத்திற்காக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுக்கு பாராட்டுக்கள்.
அமைச்சர் அலி சப்தி நீதி அமைச்சராக பணியாற்றிய கால கட்டத்தில் பல முக்கிய சட்ட திருத்தங்களை மேற்கொண்டுள்ளதோடு, நிதியமைச்சராக சேவையாற்றிய போது, வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான சமீபத்திய பேச்சுவார்த்தைகளுக்கான இலங்கையின் தூதுக் குழுவை அவர் வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

