கோட்டாபய ராஜபக்ச நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்: அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ்

132 0

இந்த நூற்றாண்டில் பாரியளவிலான இன அழிப்பினை மேற்கொண்ட கோட்டாபய ராஜபக்ச நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அருட்தந்தை, ஈழத்தமிழர்களுடைய வாழ்விலேயே கருப்பு ஜூலை என்கின்ற 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மிகப்பெரிய இனவழிப்பு கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டு தமிழர்கள் கொன்று அளிக்கப்பட்ட அந்த நாட்களின் உடைய முப்பத்தி ஒன்பதாவது ஆண்டு நினைவு நாளில் நாங்கள் கூடியிருக்கிறோம்.

இன்றைய நாளிலேயே அனைவருக்கும் தெரியும் இலங்கையினுடைய அரசியல் மிக இறுக்கமும் நெருக்கடியும் நிறைந்த இந்த சூழ்நிலையில் இலங்கை ஜனாதிபதியாக இருந்த தமிழின அழிப்பாளர் கோட்டாபய ராஜபக்ச மக்கள் புரட்சியின் காரணமாக நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அருட்தந்தை, ஈழத்தமிழர்களுடைய வாழ்விலேயே கருப்பு ஜூலை என்கின்ற 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மிகப்பெரிய இனவழிப்பு கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டு தமிழர்கள் கொன்று அளிக்கப்பட்ட அந்த நாட்களின் உடைய முப்பத்தி ஒன்பதாவது ஆண்டு நினைவு நாளில் நாங்கள் கூடியிருக்கிறோம்.

இன்றைய நாளிலேயே அனைவருக்கும் தெரியும் இலங்கையினுடைய அரசியல் மிக இறுக்கமும் நெருக்கடியும் நிறைந்த இந்த சூழ்நிலையில் இலங்கை ஜனாதிபதியாக இருந்த தமிழின அழிப்பாளர் கோட்டாபய ராஜபக்ச மக்கள் புரட்சியின் காரணமாக நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையிலே தொடர்ந்தும் இன்னுமொருவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சியிலே கோட்டா கோ கம என்று சொல்லப்படுகின்ற நூறு நாட்களுக்கு அதிகமாக இடம்பெற்ற போராட்டத்தின் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இலங்கை வரலாற்றில் தமிழ் மக்கள் தங்களுடைய தார்மீக அடிப்படையில் நியாயமான உரிமைகளுக்காக நெடுங்காலமாக சாத்வீக முறையில் போராடிய போது அவர்களை தொடர்ச்சியாக பேரினவாத அரசு வன்முறையினால் அடக்கிய பொழுது தான் இந்த நாட்டிலே ஆயுதப்போராட்டம் உருவாகியது.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச போன்றவர்கள் அண்மையில் இலங்கையில் இருந்து தென்னிலங்கை மக்களினாள் விரட்டப்பட்டு இருக்கின்றார்கள். அனைவருக்கும் தெரியும் சர்வதேசத்துக்கும் தெரியும் இவர்கள் மேற்கொண்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்பு என்பது இந்த நூற்றாண்டிலேயே உலகிலேயே மேற்கொள்ளப்பட்ட முதலாவது இனவழிப்பாகும்.

இந்த அழிப்பினை மேற்கொண்டவர்களுக்கு எதிராக தமிழர் தரப்பு பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தது மாத்திரமல்ல, காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுடைய உறவுகள் கிட்டத்தட்ட ஆயிரத்து தொள்ளாயிரத்துக்கு அதிகமான நாட்களிலே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.

ஐ.நா சபையில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த தமிழின அழிப்புக்கு அவர்கள் பொறுப்பு கூறவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூறவேண்டும். தடுத்து வைத்து இருக்கின்ற அரசியல் கைதிகள் விடயத்தில் பொறுப்புக்கூற வேண்டும். அதே நேரத்தில் இன அழிப்பினுடைய உச்சமான போரின் கடைசி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறி.

ஆனால் இவர்கள் எதுவித பிரச்சினைகளும் இன்றி அவர்கள் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்று இருக்கின்றார்கள். ஆகவே உலகத் தமிழினமும் உலகத்திலே நீதியை எதிர்பார்க்கின்ற ஒவ்வொருவரும் இவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதாவது ஐசிசி என சொல்லப்படுகின்ற சர்வதேச நீதிமன்றத்துக்கு சர்வதேச நீதிபொறிமுறைகளுக்கும் முன்பாக இவர்கள் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்.

எந்த நாட்டிலே இவர்கள் இருக்கிறார்களோ அந்த நாட்டிலே இவர்கள் கைது செய்யப்படுவது மாத்திரமல்ல அவர்கள் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். உலகத்திலே செய்யப்பட்ட யூகோஸ்லாவியாவில் முன்னால் அதிபராக இருந்த மிலோஸவிக் அவர்கள் இப்படியான கொடூரத்தை செய்தமைக்காக ஐக்கிய நாடுகள் அல்லது பல்நாட்டு நீதி பொறிமுறையின் பின்னர் தன்னுடைய பதவிக் காலத்தின் பின்னர் நிறுத்தப்பட்டவர்.

இதனை முன்னுதாரணமாக கொண்டு கோத்தபாய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஷ அதனோடு கூட்டினைந்தவர்கள் எந்த இடத்திலாவது கைது செய்யப்பட்டு நீதி முன் நிறுத்தப்பட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தமிழ் காட்சிகள் தங்களுடைய மக்களுடைய அரசியல் நலன்களை முற்றாக மறந்து அதாவது துன்பபடுகின்ற இன அழிப்புக்கு முகம்கொடுத்து நீதி கிடைக்காமல் துன்புறுகின்ற மக்களுடைய பிரதிநிதிகள் என்பதை மறந்து தங்களுடைய சுயலாப, கட்சி, பதவி மற்றும் அதிகார ஆசைகளுக்கு உட்பட்டு தமிழ் மக்களுடைய நலன்களை புறம்பே தள்ளியிருக்கிறார்கள் அதனுடைய எடுத்துக்காட்டு அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவுசெய்கின்ற முறைமை.

ஜனாதிபதியாக யார் வந்தாலும் தமிழ் மக்களுக்கு அவர்கள் ஒரு நிரந்தரமான அல்லது தமிழ் மக்களுடைய ஆகக்குறைந்த அபிலாசைகளை கூட பூர்த்தி செய்ய முடியாதவர்கள் அல்லது அவர்களால் எதுவும் செய்யப்போது இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தங்களுடைய அடிப்படை கோட்பாடுகள் என்ன தாங்கள் தமிழ்மக்கள் சார்பாக என்ன கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள் தமிழ் மக்களுக்காக தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு கூட்டு கோரிக்கையாக முன்வைத்து ஒன்றிணைந்து தமிழ் தேசியத்தின் பெயரால் செயற்படவில்லை. என்ன சொல்லப்படுகின்ற அவர்கள் எல்லோரும் மக்களுடைய நலன்களுக்காக இந்த வடகிழக்கு மக்களுடைய அடிப்படை உரிமைக்காக செய்யப்பட வேண்டியவர்கள்.

அதை விடுத்து இவர்கள் தங்களுடைய நலன்களுக்காகவும் தங்களுடைய சொந்த நிகழ்ச்சிநிரலிற்கு உட்பட்டு இரண்டு அல்லது மூன்று தரப்பாக பிரிந்து இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு இருக்கின்றார்கள் அது ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயற்பாடாகும். தென்னிலங்கையில் மக்களுடைய புரட்சியும் தொடர்ச்சியான போராட்டமும் ஒரு மாற்றத்தை உருவாக்கி இருக்கின்றது. அரசியலிலே தலைகீழ் மாற்றத்தை உருவாக்கிய நிற்கின்றது.

ஆகவே இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களாகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும் நிச்சயமாக தமிழர்களுடைய தீர்வைப் பொறுத்த வரையிலே அரசியல் கட்சிகளுக்கு ஒரு தெளிவான திட்டம் இல்லை. ஒரு கட்டுக்கோப்பான முடிவுகளை அவர்களிடத்தில் இல்லை. ஆனால் நிச்சயமாக நாங்கள் தமிழ் மக்கள் என்ன தீர்வை எதிர்பார்க்கின்றார்கள் என்பதனை ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக உலகத் தமிழர்கள் தழுவி சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி தமிழ் மக்களுடைய தீர்வு என்ன என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்கின்ற ஒரு ஏற்பாட்டை இவர்கள் உருவாக்க வேண்டும்.

தமிழ் தேசியத்தில் அரசியல் செய்கின்றவர்கள் தங்களுடைய நலன்களுக்காக தமிழ் மக்களுடைய நலன்களுக்காகவும் இந்த நாட்டிலே 70 வருடங்களுக்கு அதிகமாக உரிமை மறுக்கப்பட்டு போராடுகின்ற ஒரு இனம் மாத்திரமல்ல ஒரு இன அழிப்பை எதிர் கொண்டவர்கள் ஆகவே இந்த இனத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் நேர்மையோடும் உண்மையோடும் உறுதியோடும் நிச்சயமாக தமிழ் மக்களுக்காக செயற்படவும் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை தீர்வுகள் என்ன என்பதை தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் அரசியல் கட்சிகள் அல்ல என்பதை ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக செயல்படுவதற்கு முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேநேரம் காலம்காலமாக தமிழ் தேசியத்தினைப்பேசி அரசியல்செய்பவர்கள் தொடர்ச்சியான தவறுகளை செய்துவருகின்றனர்.தமிழ் மக்களின் நிலையினை கருத்தில்கொண்டு இனியாவது ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.