ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பொருட்களுடன் 3 பேர் கைது

337 0

ஜனாதிபதி மாளிகையில் இருந்து திருடப்பட்ட பழங்கால பொருட்களுடன் 3 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மக்கள் எழுச்சிப் போராட்டத்தையடுத்து ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையின் ஜன்னல்களில் பொருத்தப்பட்டிருந்த பித்தளையால் செய்யப்பட்ட 40 பந்து வடிவிலான உருண்டைகளை திருடிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருடப்பட்ட 40 பித்தளை உருண்டைகள் நேற்றையதினம் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவருக்கு விற்க முயன்றபோதே குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டதுடன் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.