நாளை முதல் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கான பேசசுவார்த்தை -பிரசன்ன ரணதுங்க

296 0

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நாளை முதல் முன்னெடுக்கப்படும்.சர்வக்கட்சி அரசாங்கத்தின் வகிபாகம் மற்றும்,செயற்பாட்டு காலம் தொடர்பில் சகல கட்சிகளுடன் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையினை மேற்கொண்டு இருவாரத்திற்கள் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளோம் என ஆளும் தரப்பினர் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 18 அமைச்சுக்களை உள்ளடக்கிய தற்காலிக அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார நெருக்க்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் சகல அரசியல் கட்சிகளின் வகிபாகத்துடன் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

சர்வக்கட்சி அரசாங்கத்துடன் ஒன்றினையுமாறு ஐக்கிய மக்கள் சக்தி,மக்கள் விடுதலை முன்னணி உட்பட பிரதான அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.அரசியல் கட்சிகளுடனான விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை நாளை முதல் முன்னெடுக்கப்படும்.

சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம்,செயற்பாட்டு காலம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடப்படும்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டதை தொடர்ந்து மக்களின் கோரிக்கைக்கமைய தேர்தலுக்கு செல்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.கருத்து சுதந்திரம் காணப்படுவதற்காக அதனை தவறான முறையில் பயன்படுத்த முடியாது.போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்றார்.