முல்லைத்தீவில் இலவச குடிநீர் விநியோகித்திற்கான நடமாடும் சேவை

200 0

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வீட்டு பாவனையாளர்களுக்கான இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த சேவை முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் மற்றும் தண்டுவான் கிராம அலுவலர் பிரிவிலும், பெரிய இத்திமடு கிராம அலுவலர் பிரிவிலும் முன்னெடுக்கப்படும்.

எதிர்வரும் 26 ஆம் திகதி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகத்தர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு வருகை தந்து இதற்கான விண்ணப்படிவங்களை வழங்கவுள்ளனர்.

விண்ணப்படிவங்களை பெற்றுக்கொண்ட பொது மக்கள் அவற்றினை அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 20ஆம் திகதி தண்டுவான் கிராம அலுவலர் அலுவலகத்தில் பிற்பகல் 2மணிக்குள் கையளிக்க வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.