“ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு கனடா நீதிமன்றத்தில் கிடைத்த அங்கீகாரம்!

258 0

யூதர்களின் இனப்படுகொலையோடு தமிழன இனப்படுகொலையை ஒப்பிட்டு கனேடிய நாடாளுமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டமையானது கனேடிய நீதிமன்றத்தில் தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக காணப்படுகின்றது என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,கனேடிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரனையின் இனப்படுகொலை தீர்மானம் இறுதியில் வெற்றிப்பெற்றதன் பின்னணியில் சட்டரீதியான தீர்ப்பிற்கு இந்த தீர்மானம் வலுச்சேர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களை இனப்படுகொலை செய்த கோட்டாபய,மகிந்த அரசாங்கத்தின் மீது தடைகளை விதிக்க வேண்டும் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.