யாழில் வித்தியாசமான முறையில் கியு.ஆர். கோர்ட் விற்பனை

173 0

எரிபொருளுக்கான தேசிய பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் , எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் பாஸ் முறை திட்டத்தின் கீழ் பதிவு செய்து QR கோட்டை பெற்றுவருகின்றனர்.

அவ்வாறு பெற்றுக்கொண்ட பாஸின் QR கோட்டை  அடையாள அட்டை போன்றும், கீ டேக் போன்றும் தயாரித்து  கட்டணம் அறவிட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

யாழில் ஒருவர்  QR கோட்டினை வாகன திறப்புக்களில் மாட்டி விட கூடியவாறாக கீ டேக் வடிவில் செய்து கொடுப்பதுடன், அதற்காக 600 ரூபாயினை அறவீடு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதே போன்று மற்றுமொருவர் அடையாள அட்டை போன்று QR கோட்டினை வடிவமைத்து  அதற்காக அவர் 300 ரூபாயினை அறவீடு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.