யாழ்.காரைநகர் கடற்பரப்பில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
575 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாதகல் பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேரள கஞ்சா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, காங்கேசன்துறை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவழைப்பின் போது 575 கிலோ கிராம் கஞ்சாவும் படகும் கைப்பற்றபட்டுள்ளது.
இதனைதொடர்ந்து கடற்படையினர் கைதுசெய்யப்பட்ட நபர்களையும், கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகு என்பவற்றையும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட படகு மற்றும் கஞ்சா என்பனவற்றை பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

