இடைக்கால அரசாங்கத்தில் அக்கறை காட்டுங்கள் – அனுர

109 0

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபரைப் பொருட்படுத்தாமல், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, பத்து பேருக்கு மிகாமல் அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இன்றைய தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்களின் பல எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் தேவையில்லை என்றும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் போது அதன் பதவிக்காலம் ஆரம்பமே அறிவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.