தமிழ் தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு

259 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதென ஏகமானதாக தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

அவர் வீ கருத்து வெளியிடும்போது,

‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று நடத்திய கூட்டத்தில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதென ஏகமனதாக தீர்மனித்துள்ளது’ என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.