டலஸை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் முன்மொழிந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது – பேராசிரியர் சரித ஹேரத்

260 0

ஜனாதிபதி தெரிவிற்கான போட்டிக்கு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெருமவை எதிர்க்கட்சி  தலைவர் முன்மொழிந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது.

நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தின் அடிப்படையில் ஜனாதிபதி தெரிவு இடம் பெறும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு இன்று சபாநாயகர் தலைமையில் கூடி புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வேட்பு மனுக்கல் சமர்ப்பித்தல் நிறைவு பெற்றதை தொடர்ந்து சபை ஒத்திவைப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையி அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ள நிலையில் பாராளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் காலம் தோற்றம் பெற்றுள்ளது.

அரசியல் ரீதியிலான கொள்கையில் பாரதூரமான மாற்றங்கள் அவசியம் என்ற கருத்து சமூகத்தின் மத்தியில் தற்போது வலுப்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும்.அரசியல ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன்,சகல அரசியல் கட்சிகளும் ஒன்றினைந்து மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.

புதிய ஜனாதிபதி தெரிவிற்கான போட்டியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆளும் தரப்பின் உறுப்பினர் டலஸ் அழகப்பெரும பரிந்துரை செய்துள்ளமை மகிழ்விற்குரியது.நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய ஜனாதிபதி தெரிவு இடம்பெற வேண்டும்.

மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் நாட்டில் ஸ்தீரமான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றார்.