கிளிநொச்சி, பூநகரி பிரதேச சபையின் எல்லைப் பரப்பில் உள்ள பாழடைந்த அல்லது அபாயகரமாக துப்பரவு செய்யப்படாது உள்ள கட்டடங்களை அகற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச சபையின் அமர்வு, தவிசாளர் சி.சிறிரஞ்சன் தலைமையில் இன்று (19) நடைபெற்றது.
இந்த அமர்வில் புநகரி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பாழடைந்த அல்லது அபாயகரமாக துப்பரவு செய்யப்படாத நிலையில் உள்ள காணிகளால் பொதுமக்கள் பல வகையான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பாவனையற்ற கட்டடங்களில் மது போதை பாவனை, சமூக சீர்கேடுகள் நடைபெற்று வருவதுடன், பயனற்ற கட்டடங்கள் இடிந்து விடும் நிலையில் உள்ளதனால் உயிர் ஆபத்துகள் ஏற்படுவதாகவும் உள்ளது.
எனவே, பயனற்ற கட்டடங்களை முழுமையாக துப்பரவு செய்து பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்படி, இன்றிலிருந்து (19) 14 நாட்களுக்குள் குறித்த கட்டடங்களை உரியவர்கள் அகற்றாவிட்டால் பிரதேச சபையால் குறித்த கட்டடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென மேற்படி சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

