அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க்கல்விக்கழக புகைப்படப்பிரிவின் நிதி அனுசரணையில் சமைத்த உணவு வழங்கப்பட்டது.

467 0

ஜேர்மனி தமிழ்க்கல்விக்கழக புகைப்படப்பிரிவின் நிதி அனுசரணையில் தற்போதய பொருளாதாரப் பிரச்சினையால் பட்டினிச் சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில் அதனை ஈடுசெய்யும் முகமாக 15.07.2022 அன்று சமைத்த உணவு வழங்கல் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை- குறுந்தையடி கிராமத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் உணவு வழங்கப்பட்டன. இதில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேருக்கு இரண்டு நேர சமைத்த உணவு வழங்கப்பட்டது. இவ்வுதவிகளைப் பெற்ற அம்பாறை வாழ் தமிழ் மக்கள், ஜேர்மன் கல்விக்கழகப் புகைப்படப்பிரிவு இளையோர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.