மாலபே சயிடம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், மூன்று குழுக்களை அனுப்பி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, முல்லேரியா பொலிஸார் மற்றும் மிரிஹான விஷேட குற்ற விசாரணைப் பிரிவினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, இன்று பகல் அரச இரசாயன பகுப்பாய்வாளர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்லவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். நேற்று இரவு 08.30 அளவில், மாலபே சயிடம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
முகத்தை முழுவதும் மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்து வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக, சமீர குறிப்பிட்டுள்ளார். சயிடம் நிறுவனத்தின் முன் நடந்த இந்த சம்பவத்தில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் யார் என்பது இதுவரை தெரியவரவில்லை. சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

