கொழும்பிலிருந்து நேற்று (14) யாழ்ப்பாணத்துக்கு பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு அருகிலுள்ள ரயில் கடவையை கடக்க முயன்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 59 வயதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

