அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞன் உயிரிழப்பு

219 0

பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்றையதினம் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குருநாகல், தலதாகம பிரதேசத்தை சேர்ந்த ஜாலிய திசாநாயக்க (26 வயது) என்ற ஒரு குழந்தையின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு இலக்கான குறித்த இளைஞன் சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.