யாழ் மந்திகையில் சட்டவிரோத எரிபொருள் விற்பனை நிலையம் சுற்றிவளைப்பு

177 0

யாழ்ப்பாணம் மந்திகை புலோலி பகுதியில் சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரது வீட்டிலிருந்து பருத்தித்துறை புலனாய்வு பொலிஸார் 10 லீற்றர் பெற்றோல் மற்றும் 20 லீற்றர் டீசல் என்பன ;(12) செவ்வாய்கிழமை  பிற்பகல் 5:30 மணியளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதல் நடாத்திய போது 1.5 லீற்றர் கொண்ட 10 போத்தல்களில் 10 லீற்றர் பெட்ரோலும், 20 லீற்றர் டீசலையும் கைப்பற்றி சென்றுள்ளதுடன் உரிய சட்ட நடவடிக்கைக்காக பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சட்டவிரோதமான எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் பருத்தித்துறை சாலை சாரதி என்பது குறிப்பிட தக்கது.

இதே வேளை பருத்தித்துறை தும்பளை பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் ஒருவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட 450 லீற்றர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் அத்தியாவசியமான தேவைகளுக்கு வழங்கவென  புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.