லிட்ரோ நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு

123 0

லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 50 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

அதன்படி 4,860 ரூபாவாக இருந்த 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,910 ரூபாவாக உள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (11) மற்றும் நாளை (12) விநியோகம் இடம்பெறும் எனவும், ஏனைய பகுதிகளுக்கான எரிவாயு விநியோகம் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் Litro நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தேவையற்ற கையிருப்புகளை தடுக்கும் வகையில் எரிவாயு கொள்வனவு செய்யும் போது மே மாத மின் கட்டணத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.