அமைதியான ஜனநாயகவழியிலான அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும்- இலங்கை;கான அமெரிக்க தூதுவர்

236 0

இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்,

அறிக்கையொன்றில் அவர் இது குறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது

பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை மற்றும் அனைத்து இலங்கையர்களிற்கும் சிறந்த எதிர்காலம் ஆகியவற்றை கோரி பல்வேறுதரப்பட்ட இலங்கையர்களும் வீதியில் இறங்கியுள்ள நிலையில் இலங்கையின் நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்துவருகின்றோம்.

இலங்கையின் வரலாற்றில் இது மிகவும் பலவீனமான குறிப்பிடத்தக்க தருணம்.இந்த தருணத்தை இலங்கை நாடாளுமன்றம் தேசத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான அர்ப்பணிப்புடன் அணுகுவதற்கு அனுமதியளிப்பதற்கு அனைத்து இலங்கையர்களும் பொறுமையையும் கௌரவத்தையும் கடைப்பிடிக்கவேண்டும்.

அமைதியான ஜனநாயகவழியிலான அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்,மேலும் எந்த புதிய  புதிய அரசமைப்பு ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தையும் நீண்டகால பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கான தீர்வுகளை அடையாளம் கண்டுநடைமுறைப்படுத்துமாறும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இலங்கை கடன்நெருக்கடியை தீர்ப்பதற்கும் அனைவருக்கும் சமமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பொறுப்புணர்வுமிக்க பேண்தகு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் தருணத்தில் அமெரிக்கா சர்வதேசசமூகத்தின் ஏனைய பல நாடுகளுடன் இணைந்து ஆதரவளிக்க தயாராகவுள்ளது.

அமைதியான விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பத்திரிகையாளர்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் நாங்கள் கண்டிக்கின்றோம் வன்முறைகள் ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடைய சொத்தழிப்புகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதியின் முன்நிறுத்தவேண்டும்.