அனைத்து பாடசாலைகளுக்கும் 15 ஆம் திகதி வரை விடுமுறை – கல்வி அமைச்சு

216 0

நாட்டில் நாளை (11) முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடியுடன் தொடரும் போக்குவரத்து சிரமங்கள் கல்விக்கு இடையூறாக இருப்பதால் கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜூலை 18 ஆம் திகதி திங்கட்கிழமை அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.