ஜூலை 13ஆம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு!

256 0

எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகாவிட்டால், அறிவித்தல் இன்றி ஹர்த்தால் வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்க காரியாலயத்தில் இன்று நடைபெற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.