என்னை முதல்வராக வைத்துக்கொண்டு அசிங்கப்படுத்துகிறார்கள் – ஓ.பன்னீர்செல்வம்

302 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சுமார் 40 நிமிடங்கள் தியானம் செய்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

புரட்சி தலைவி அவர்களது நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்த எனது மனசாட்டி உந்தியதால் தியானம் செய்ததாக கூறிய பன்னீர்செல்வம், நாட்டு மக்களுக்கும், அதிமுக உடன்பிறப்புகளுக்கும் சில உண்மை விவரங்களை தெரியபடுத்த அம்மாவின் ஆன்மா என்னை உந்தியது. எதுவே எனது கடமையும் ஆகும் என்ற கூறினார்.

அதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அவரது உடல்நிலை மோசமாக இருந்த போது என்னிடம் வந்து அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது கட்சியையும் ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று என்னை கேட்டதால் நான் முதல்வராக பதவியேற்றேன்.

முதல்வரான பின்னர் எனது பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்று நினைத்து பணியை தொடங்கினேன்.

அப்போது வர்தா புயல் வந்த போது 4 நாட்களிலே சிறப்பான முறையில் முடித்தேன்.

அரசின் மீது நற்பெயர் கிடைத்தது. அது மாண்மிகு அம்மா ஆட்சிக்கு வந்த நல்லப் பெயர் என்று நினைத்தேன். ஆனால் அது கட்சித்தலைமைக்கு எரிச்சல் ஊட்டியது.

மேலும் ஜல்லிக்கட்டு, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தான் தீர்வு கொண்டுவந்ததால் அவர்களது எரிச்சல் மேலும் அதிகரித்தது.

எனவே என்னை முதல்வர் பதவியில் வைத்துக்கொண்டு கட்சித்தலைமை என்னை அவமானப்படுத்தியது. அசிங்கப்படுத்தியது.

சட்டப்பேரவையில் எனக்கு கீழே இருக்கும் அமைச்சர் என்னை பதவி விலகச் சொல்லி கட்சித்தலைமையை முதல்வராக பதவியேற்க வேண்டும் என்றனர்.

என்னை முதலமைச்சராக உக்கார வைத்துக் கொண்டு இவ்வாறு அசிங்கப்படுத்துகிறார்கள்.

என்னை தனிப்பட்ட முறையில் பேசினால் பொறுத்துக் கொள்வேன். பொதுவாக பேசியதால் எனது முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்தேன் என்று கூறினார்.