ஜெயலலிதாவிற்கு செலவு செய்த அந்த குடும்பத்தார் யார்? – தீபா கேள்வி

218 0
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரது ஒட்டுமொத்த சிகிச்சைக்கு ரூ.5.5 கோடி செலவு ஆகியுள்ளதாகவும் அதனை அவரது உறவினர்கள் அளித்தனர் என்றும் கூறினர்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, “ஜெயலலிதாவின் மருத்துவ செலவுக்கான ரூ.5.5 கோடியை நான் கொடுக்கவில்லை. சிகிச்சைக்கு செலவு செய்த அந்த உறவினர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து 2 மாதங்களுக்குப் பின் விளக்கம் ஏன்? மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்க்க எனக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது. மருத்துவர்கள் அளித்த விளக்கங்கள் போதுமானதாக இல்லை என கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.