விமலின் மனைவியிடம் உதய கம்மன்பில கூறிய இரகசியம் அம்பலம்!

309 0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தார். எனவும் அவருடைய பிணை மறுக்கப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட வேளையில் அவருடைய மனைவி சஷி வீரசங்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பம்பில ஆகியோரும் வந்துள்ளனர்.

அதன்படி நீதிமன்ற வளாகத்தில் சஷி வீரவங்சவும் உதய கம்பன்பிலவும் விமலின் பிணை விடுதலை தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர்.

இதன் போது சஹியிடம் “எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்”.

“அதன் பின்னர் ஒரு வாரம் அல்லது அதிக பட்சம் பத்து நாட்களுக்குள் விமலை வெளியே கொண்டு வந்து விடலாம்”.

“பயப்பட வேண்டாம் 7ஆம் திகதிக்கு முன்னர் விமலை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடலாம் இது உறுதியாகிவிட்டது, விமல் வீட்டில் இருக்க வேண்டும் தானே” என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன் படி நீதிமன்றத்தில் உத்தரவுகளைத் தாண்டி உதயகம்பன்பில தீர்ப்புகளை முன் கூட்டியே அறிந்து வைத்து கூறியுள்ளார்.

இவர்களின் உரையாடல் இரகசியமாக இடம் பெற்றது எனவும் அது எதேச்சையாக ஊடகம் ஒன்றின் பார்வையில் சிக்கி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.