200 ரூபாவுக்கு குறைவாக எரிபொருளை வழங்க முடியும்: ஜனக்க ரத்னாயக்க

157 0

எரிபொருள் லீற்றர் ஒன்றை 200 ரூபாவிற்கும் குறைந்த விலையில் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க நேற்று மீண்டும் தெரிவித்துள்ளார்.

கோப் குழுவில் முன்னிலையாகி கருத்துரைத்த அவர், பெற்றோலியக் கூட்டுதாபனம், இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்கும் போது பிரச்சினை ஒன்று உள்ளமை தெரியவந்ததது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த போது, குறித்த அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள சூத்திரமானது, எந்தவித அடிப்படை தன்மையும் இல்லாமல் உள்ளதோடு அதற்கமைய விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய, கடந்த இரண்டு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கான கட்டணம் மற்றும் அதற்கான வரி என்பன தொடர்பில் நாம் ஆராய்ந்துள்ளோம். அவற்றுக்கு இடையில் 150 ரூபா முதல் 200 ரூபா வரையான வித்தியாசம் காணப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.